×

எங்களுக்கு அரசு கார்கள் வேண்டாம்: சட்டசபை செயலகத்திற்கு திமுக கடிதம்..!!

 

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 59 பேருக்கும் அரசு கார் தேவையில்லை என்று அவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி னார். அதைத்தொடர்ந்து அதற்கான கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ. கோவி செழியன் வழங் கியுள்ளார்.

அரசு கார்கள் வேண்டாம் என்ற அந்தக் கடிதத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்து அந்த கட்சி சின்னத்தில் வெற்றி பெற்ற மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களான ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நித்தியானந்தன் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.