×

நாங்களாக வெளியேறவில்லை.. - கூட்டணி விவகாரம் குறித்து திருமாவளவன் ஓபன் டாக்..!

 

சென்னையில் வி.சி.க., தலைவர் திருமாவளவன் பேசியதாவது:

சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக வென்றது, மாற்று கூட்டணியில் இருந்த வி.சி.க.,வுக்கு எப்படி மகிழ்ச்சியை தரும்? ஆனால், அ.தி.மு.க., போன்ற கட்சிகளை தவிர்த்து, மதச்சார்பற்ற சக்தியாக இருக்கும் எங்களை அழைத்து ஆதரவு கேட்டது, த.வெ.க.,வின் துணிச்சலான முடிவு. தி.மு.க., கூட்டணியில் வி.சி.க., இல்லை என அந்த கட்சி தான் கூறியது.

கூட்டணியில் இருந்து நாங்களாக வெளியேறவில்லை. நான், த.வெ.க., கூட்டணியில் இருப்பதாகவும் அறிவிக்கவில்லை.

இனி, த.வெ.க., தலைமையில் கூட்டணி உறுதியானால், அக்கூட்டணியில் இடம்பெறுவோம். குதிரை பேரம் விவகாரத்தில், கவர்னருக்கு அதிகாரம் இருந்தால் தலையிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.