"தவெக ஆட்சி நல்ல பெயர் வாங்க காரணம் நாங்க தான்”- சேகர்பாபு
அதிகளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காமல் இருக்க தி.மு.க செய்த திட்டங்கள் தான் காரணம் என திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, “திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது, 731-இடங்கள் பள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டன.. தற்போது 231-ஆக குறைந்து விட்டது என சென்னை மாநகராட்சி ஆணையரே சான்றிதழ் கொடுத்துவிட்டார்.. தவெக ஆட்சி நல்ல பெயர் வாங்குவதற்கு காரணமாக இருந்தது திமுக ஆட்சி தான். அதிகளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காமல் இருக்க தி.மு.க செய்த திட்டங்கள் தான் காரணம். நாங்கள் ஏற்படுத்திய கட்டமைப்பால்தான் இவ்வளவு மழை பெய்தும் நீர்த்தேக்கம் எதுவும் இல்லை. அண்ணன் திருமா மீது ஒரு மரியாதை வைத்துள்ளோம்..! த.வெ.க கூட்டணி ஒரு குழம்பிய குட்டை.. அதில் மீன் பிடிக்கவே முடியாது.. வைகோ ஒரு சிறந்த பேச்சாளர்.. ஆனால் அவரின் வரலாற்றை எடுத்து பார்த்தால் நிலையில்லாமல் மாறி மாறி பேசிக்கொண்டிருப்பார்” என்றார்.