"எங்களுக்கு லாப நோக்கமில்லை.." - ஜாய் ஆலுக்காஸ்
தமிழ்நாட்டின் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் பங்கேற்பதில் பெருமை என ஜாய் ஆலுக்காஸ் விளக்கமளித்துள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின் டெண்டர் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி ஆகியவற்றை சேர்த்து ஒரு பைசாவில் மதிப்பிட்டு டெண்டர் தந்துள்ளது. இன்றைக்கு ஒரு பைசாவில் 755 கோடி மதிப்புள்ளான டெண்டர்களைஎடுத்து இருக்கிறது ஜோஸ்ஆலுக்காஸின் தாய் நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ். அந்நிறுவனத்திற்கு பணி செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்கு தேவையான ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 499 தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு 70 &30 என்ற சதவீதத்தில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி, போக்குவரத்து ஆகியவற்றின் மதிப்பு ஒரு பைசாவில் உள்ளதாக மதிப்பிடுவதில் விஜய் தலைமையிலான தவெக அரசின் வெளிபடைதன்மை கேள்விக்குறியாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம், “தமிழ்நாட்டின் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் பங்கேற்பதில் பெருமை. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் இணைந்ததில், எங்களுக்கு லாப நோக்கமில்லை. மக்களுக்கு திரும்ப வழங்கும் நோக்கிலேயே பங்கெடுத்துள்ளோம். வாய்ப்பளித்த முதலமைச்சர் விஜய்க்கு நன்றி. வழங்கப்படும் ஒவ்வொரு தங்க மோதிரமும் தூய்மை, ஹால்மார்க் முத்திரை மற்றும் சிறந்த கைவினைத்திறனுடன் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளது.