☰
×

இயக்குனர் சேரனுக்கு எதிராக போராட்டம் அறிவித்த வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் நற்பணி மன்றம் 

 

ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் திவாகரின் நடிப்பு குறித்து சேரன் விமர்சித்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. 

சமூக வலைதளங்களில் தன்னை 'வாட்டர் மெலன் ஸ்டார்' என அடையாளப்படுத்திக் கொள்ளும் Dr.T. திவாகர் (பிக்பாஸ் நடிப்பு அரக்கன் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது) குறித்து, ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் மற்றும் நடிகர் மைம் கோபி ஆகியோர் அவதூறாகவும் அநாகரிகமாகவும் பேசியதாகக் கூறி, அதனைக் கண்டித்து 'தமிழ்நாடு வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் நற்பணி மன்றம்' சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நவம்பர் 20, 2026 அன்று காலை 9 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயா தொலைக்காட்சியில் இயக்குநர் சேரனின் தொகுப்பாளர் (Host) பதவியைப் பறிக்க வேண்டும் என்றும், இயக்குநர் சேரன் மற்றும் மைம் கோபி ஆகிய இருவரும் இணைந்து தலைவர் வாட்டர் மெலன் ஸ்டாரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இரண்டு முக்கியக் கோரிக்கைகள் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த இரு கோரிக்கைகளும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மன்றத்தின் தலைவர் Dr.T. திவாகர் மற்றும் பொதுச்செயலாளர் சா. மணிகண்டன் ஆகியோரின் பெயர்களுடன், தர்பூசணி சின்னம் பொறித்த கொடிகளுடன் கூடிய இந்தப் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.