×

காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 31,571 கனஅடியாக குறைப்பு.. என்ன காரணம்?

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வந்தது. நேற்று முன்தினம் நொடிக்கு 50,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வந்தது. அதனைத்தொடர்ந்து நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பும் அதிகரித்தது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர் வரத்து 1.5 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. நீர் திறப்பால்
 

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வந்தது. நேற்று முன்தினம் நொடிக்கு 50,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வந்தது. அதனைத்தொடர்ந்து நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பும் அதிகரித்தது.

இதன் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர் வரத்து 1.5 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. நீர் திறப்பால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதே போல, கேரளாவில் பெய்து வந்த கனமழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டமும் அதிகரித்தது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 31,571 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது கர்நாடக அணைகளான கபினியில் இருந்து 5,000 கன அடி நீரும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 25,071 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருப்பதால், காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.