×

ரயிலுக்குள் ஒழுகிய தண்ணீர் - பயணிகள் அவதி

 

சேலத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற  ரயிலில் மழைபோல ஒழுகிய தண்ணீரால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

சேலத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் மெமோ ரயில் சேலத்திலிருந்து மதியம் புறப்பட்டு திருச்சி வழியாக மயிலாடுதுறை செல்லும். இன்று சேலத்தில் ஏறி பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ரயில் பெட்டி ஒன்றில் ரயில் பயணிகளுக்கான தேவையான தண்ணீரை சேமித்து வைக்கும் இடத்திலிருந்து தொடர்ச்சியாக தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்துள்ளது. மழை பெய்வது போல் ரயில் பெட்டிக்குள் தண்ணீர் ஊற்றியது இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். ரயில்களை முறையாக ரயில்வே நிர்வாகம் பராமரிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக இருந்து வரும் நிலையில் தற்போது சேலத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயிலில் மழை பெய்வது போல் தண்ணீர் ரயில் பெட்டிக்குள் ஒழுகுவது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.