×

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 20,000 கன அடியாக அதிகரிப்பு!!

 

தமிழக எல்லையான  பிலிகுண்டுவில்  நீர்வரத்து வினாடிக்கு 20000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மற்றும் கேரள மாநிலம் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்த நிலையில் கனமழை பெய்து வருகிறது. கபினி,  கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில்,  அணையின் பாதுகாப்பை கருதி காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது.கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றின் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழ்நாட்டில் எல்லையான பிலிகுண்டுக்கு வந்து சேர்ந்தது. நேற்று காலை 6 மணி நேர நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 5100 கன அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


இந்நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.  நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொடர்ந்து மூன்றாவது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 17,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 20,000 கனாடியாக உயர்ந்துள்ளது.  நீர் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு கருதி தடை விதித்துள்ளது.