தவெக சின்னம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்..!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில், தவெக நிர்வாகி அருண்ராஜ் புகைப்படம் மற்றும் தவெக கொடி அச்சிடப்பட்ட சில்வர் டப்பாக்கள், பொதுமக்களிடம் விநியோகிக்க வைக்கப்பட்டிருந்தது. இதனை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்திருந்தனர். இப்படி இருக்கையில், தற்போது தவெக ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தண்ணீர் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில், மசூதி முன்பு சுமார் ஆயிரக்கணக்கான தவகெ ஸ்டிகர் ஒட்டப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டு, தொழுகைக்கு வரும் மக்களிடையே விநியோகம் செய்யப்பட்டிருந்தன. இது தேர்தல் விதிமீறலாகும். எனவே பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில், பறக்கும் படையினர் தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
இதேபோல பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய பூஸ்ட் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்ததாக வீடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.