ஜெம் வீரமணிக்கு உதவிய வாட்ச் மென் சீனிவாசன் கைது
சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்குகளில் கைதாகியுள்ள Gem Granite வீரமணிக்கு உதவிய Watchman சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து அதன் பேரில் பதிவு செய்திருந்த எட்டு வழக்குகளில் கைதாகியுள்ள Gem Granite வீரமணிக்கு இருபது வருடங்களுக்கு மேலாக உதவிய Watchman ஆக வேலை பார்த்து வந்த சீனிவாசன் என்பவர் இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கண்ட வாட்ச்மேன் சீனிவாசன் என்பவர் ஜெம் கிரானைட் வீரமணி, சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்வதற்காக மேற்படி சிறுமிகளை தனது வாட்ச்மேன் உதவியுடன் அவரது அறையில் உட்கார வைத்து, பின்பு வீரமணி அழைக்கும்போது சிறுமிகளை அனுப்பி வைத்துள்ளார். CCTV கேமராவின் கோணத்தை (Angle) வேறு பக்கமாக திருப்பியும் மற்றும் மின் இணைப்பை துண்டித்தும், சிறுமிகள் அறையை விட்டு செல்லும் போதும் வெளியே வரும்போதும் அவர்கள் வீட்டிற்கு வருவது CCTV கேமராவில் பதிவாகாதவண்ணம் சதி செய்துள்ளார்.
மேலும், இவ்வழக்குகள் தொடர்பாக எதிரி ஜெம் வீரமணிக்கு உதவிய சீனிவாசனின் எண்ணூரில் உள்ள வீட்டை சோதனை செய்தும், பின்பு வாட்ச்மேன் சீனிவாசனின் செல்போன் கைப்பற்றப்பட்டு தடய அறிவியல் துறைக்கு சோதனைக்காக அனுப்பபட்டுள்ளது. POCSO நீதிமன்ற நீதிபதி அவர்கள் மேற்படி எதிரி சீனிவாசன் என்பவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் (Remand) வைக்க 01.11.2026 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில், எதிரி சீனிவாசன் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.