வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் தாக்கப்பட்டாரா..? அவர் சொல்றதை கேளுங்க..!
"வாட்டர் மெலன் ஸ்டார்" என்று அழைக்கப்படும் திவாகர், ரீல்ஸ் மூலம் பிரபலமானவர், நடிகர் சூர்யா கஜினி திரைப்படத்தில் வாட்டர் மெலனை வைத்துக்கொண்டு ஸ்டைலாக நடித்த காட்சியை திவாகர் ரீ கிரியேட் செய்தார். இந்த காட்சி மூலம் பிரபலமடைந்தவர் தன்னை தானே "வாட்டர் மெலன் ஸ்டார்" என அழைத்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் தனது பேச்சுக்கள் மற்றும் செயல்களால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் வாட்டர் மெலன் திவாகர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ள விஷயம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கானா வினோத், புகழ் மற்றும் மாகாபா ஆனந்த் என மூவரும் இணைந்து தகாத வார்த்தையில் பேசினர். இது தொடர்பாக அவர்களை திருப்பி கேட்டதற்கு, அவர்கள் மூவரும் இணைந்து என்னைத் தாக்கினர். இதில் மாகாபா ஆனந்த் போதையில் இரும்பு ராடு கொண்டு என்னை தாக்கினார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் நான் புகார் அளித்துள்ளேன். அவர்கள் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் மூவருக்கும் என் மீது பொறாமை, எனது வளர்ச்சியின் மீது பொறாமை, நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னதாகவே 5 படங்களில் நடித்து விட்டேன். அதன் பின்னரும் வெளிவந்து, நான் படங்களில் நடித்து விட்டேன். அந்த பொறாமையால் அவர்கள் என்னை தாக்கியுள்ளனர்.
இதன் காரணமாக வயிற்றெரிச்சலில் அவர்கள் மூவரும் என்னை அடித்து விட்டார்கள். கானா வினோத், புகழ், மாகாபா ஆனந்த் இவர்கள் எல்லாம் நல்லவர்கள் இல்லை. மூவரும் இணைந்து என்னை தாக்கினர். ஒரு படித்த மருத்துவராக நான் முறையாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் நான் ஸ்டாராக மாறிவிடுவேன், என்ற பொறாமையில் அவர்கள் இப்படி நடந்து கொண்டுள்ளார்கள்.
என்னுடைய வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. என் பின்னால் 8 கோடி மக்கள் இருக்கிறார்கள். இறைவன் இருக்கிறார், நிச்சயம் தமிழ் சினிமாவில் நான் கதாநாயகனாக வலம் வருவேன்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.