முதல்வர் விஜய் அறை மாற்றம் செய்ய விடப்பட்ட டெண்டரில் விதிமீறலா?
முதல்வர் விஜய் அறை மாற்றம் செய்ய விடப்பட்ட டெண்டரில் எந்த விதிமீறலும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
பொதுப்பணித்துறையில் அரசு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.10.00 கோடி மதிப்பிற்கு குறைவான பணிகளுக்கு ஒப்பந்த புள்ளி கோரி பெறுவதற்கான காலம் 15 நாட்கள் ஆகும். 10 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால் 30 நாட்கள் வரை ஒப்பந்த புள்ளியை கூறுவதற்கான கால அவகாசம் அளிக்க வேண்டும்..அதன்படி தமிழ்நாடு முதல்வர் விஜய் அலுவலகம் ரூ.5 கோடி செலவில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10வது தளத்தில் பிளாக் -1, பிளாக் – 2 மற்றும் பிளாக் 3 மாற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. , தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்த விதிகளின் படி, (Tamil Nadu Tender Transparency Act) கண்காணிப்பு பொறியாளர் அவர்களின் ஒப்பந்தபுள்ளி கடந்த 12.8.2026 அன்று ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டது.
ஒப்பந்தப்புள்ளி குறித்த ஆவணங்கள், ஒப்பந்தபடிவங்கள் அனைத்தும் 17.08.2026 அன்று காலை 10 மணிக்கு மின்னணு முறையில் ஒப்பந்தங்களுக்கான இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இணையதளம் வாயிலாக நிறைவு செய்யப்பட்ட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்படுவதற்கான கடைசி நாள் 1.9.2026 மாலை 3 மணி ஆகும்
ஒப்பந்தபுள்ளி செய்தித்தாளில் வெளியான நாள் 13.08.2026 முதல் கடைசிநாள் 01.09.2026 வரை இடைப்பட்ட காலம்- 18 நாட்கள், இணையதளத்தில் வெளியான நாள் 17.08.2026 முதல்
கடைசி நாள் 01.09.2026 வரை இடைப்பட்ட காலம்-15 நாட்கள். எனவே, இந்த ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டதில் கால அவகாசம் 15 நாட்கள் இருப்பதால் எவ்வித விதி மீறல்களும் இல்லை.
பத்தாவது தளத்தில் இருந்த தடுப்புகள், மேஜை நாற்காலி மற்றும் பொய்க்கூரைகள் அகற்றும் பணிகள் நாமினேசன் (Nomination Basis) முறையில் மேற்கொள்ளப்பட்டது. தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம், லோக்பவன் ஆகிய முக்கிய இடங்களில் துரித நிலையில் பணிகள் மேற்கொள்ள நாமினேசன் முறை பயன்பாட்டில் உள்ளது.
எனவே, ஒப்பந்தபுள்ளி கோருவதற்கு முன் நிர்வாக அலுவலம் அமைக்கும் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.