#BREAKING தீபம் ஏற்றப்பட்டதா?- முதல்வரிடம் அறிக்கை கேட்ட ஆளுநர்
Nov 25, 2026, 19:50 IST
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஏன் தீபம் ஏற்றப்படவில்லை என முதல்வர் விஜய் விளக்கமளிக்குமாறு ஆளுநர் அர்லேகர் அறிக்கை கேட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட தூணில் தீபம் ஏற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தவெக அரசு நீதிமன்றம் அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிட்டுள்ளது. மேலும் தமிழக ஆளுநர் அர்லேகர், நீதிமன்றம் தீர்ப்பை அமல்படுத்தினீர்களா என்று முதல்வர் விஜயிடம் அறிக்கை கேட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபயத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை என்றால் காரணங்கள் என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறும் ஆளுநர் கோரியுள்ளார்.