ஜோசப் விஜய் ஆட்சியில் விநாயகர் சிலை குப்பையில் வீசப்பட்டதா?
விநாயகர் வழிபாட்டிற்காக செய்யப்பட்ட சிலைகளை நெல்லை மாவட்டம் தேவர்குளம் காவல்நிலையம் பின்புறம் உடைத்து நொறுக்கி குப்பை போல வீசியதாகவும், இச்செயலில் ஈடுபட்டது உதவி ஆய்வாளர்கள் லூக் ஹசன், ஆபிரகாம் ஜோசப் மற்றும் விஏஓ கிறிஸ்டின் ராசையா என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
விநாயகர் சிலைகளை வீசி எறிந்ததாக பரவும் தவறான தகவல் !
— TN IID (@tn_factcheck) September 9, 2026
பரவும் செய்தி
“நெல்லை மாவட்டம் தேவர்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விநாயகர் சிலைகளை வீசி எறிந்து உடைத்து குப்பை போல் போட்டுள்ளனர்” என்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இது… pic.twitter.com/QX1kQdf1NM
இதற்கு தமிழக உண்மை சரிபார்ப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதில், “விநாயகர் சிலைகளை வீசி எறிந்ததாக பரவும் தவறான தகவல் !
பரவும் செய்தி
“நெல்லை மாவட்டம் தேவர்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விநாயகர் சிலைகளை வீசி எறிந்து உடைத்து குப்பை போல் போட்டுள்ளனர்” என்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இது தொடர்பாக தேவர்குளம் காவல் நிலையம் அளித்துள்ள விளக்கத்தில், “தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) கலவையால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு தேவர்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தற்காலிகமாக வைக்கப்பட்டன. பின்னர் வன்னிக்கோனேந்தல் ஆரம்ப சுகாதார நிலைய மருந்து சேமிப்பு கிடங்கு கட்டடத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு மாற்றப்பட்டன. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தற்காலிகமாக சிலைகள் வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவலைப் பரப்பாதீர் !” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.