முதல்வர் ஜோசப் விஜய் வருகைக்காக ஆம்புலன்ஸ் ஒருவழிப்பாதையில் திருப்பி விடப்பட்டதா? உண்மை இது தான்..!
தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வருகைக்காக ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்வேயில் திருப்பிவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோக்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வைரல் பதிவின் பின்னணியில் இருக்கும் அசல் உண்மை என்ன என்பதைத் தமிழக அரசின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு ஆதாரங்களுடன் உடைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் அந்த வீடியோ காட்சிகளைப் பரிசீலித்த போது, போக்குவரத்து காவல் துறையினர் வழக்கமான முதலமைச்சர் கான்வாய் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது. இருப்பினும், தூரத்திலேயே ஆம்புலன்ஸ் வாகனம் சைரன் ஒலியுடன் வருவதைக் கவனித்த காவல் துறை அதிகாரிகள், கான்வாய் வாகனங்களை ஓரங்கட்டி உடனடியாக ஆம்புலன்ஸ் சிரமமின்றி கடந்து செல்ல முன்னுரிமை அளித்து வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்
இதுகுறித்துத் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் மற்றும் உண்மைச் சரிபார்ப்பு அமைப்புகள் அளித்துள்ள விளக்கத்தில், “முதலமைச்சர் உள்ளிட்ட உயர் பாதுகாப்புப் பிரமுகர்களின் பயணத்தின் போது கூட, அவசர மருத்துவ வாகனங்களுக்கு முதன்மை உரிமை அளிப்பது கட்டாய நடைமுறையாகும். எந்தவொரு சூழலிலும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படவோ அல்லது தேவையின்றி மாற்று வழியில் திருப்பிவிடப்படவோ இல்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளனர். தவறான சூழமைவோடு (Misleading context) இந்த வீடியோ பரப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் அரசியல் காரணங்களுக்காக அரைகுறையான வீடியோ துணுக்குகளைப் பகிர்ந்து வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் எனப் பொதுமக்களுக்குக் காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
முதல்வர் வருவதற்காக ஒரு பக்கம் ரோட்டையே அடைத்து வைத்துள்ளனர் .. ஆம்புலன்ஸ் கூட அவசரத்துக்கு ஒன்வேயில் போலீஸார் திருப்பி விட்டுள்ளனர் ..
— Vinoth Arumugam (@vinothbjp100) August 9, 2026
ஒரு மாதத்திற்கு முன்பு மக்களோடு பயணிக்கும் முதல்வர்னு விளம்பரம் பண்ணிட்டு இருந்தானுங்க .. 🤦#TVKVijayFails pic.twitter.com/ujvZt6ouye