மூதாட்டியின் காலில் விழுந்த வாஜ்பாய்- தவறான தகவலை சொன்ன அமைச்சர் கீர்த்தனா? தீயாய் பரவும் செய்தி
ஹைட்ரோ க்ளோரிக் சிஸ்டத்தில், எண்ணெய் கசியாமல் இருப்பதற்கான ‘ஓ-ரிங்' என்ற கருவியை மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்றொரு மூதாட்டி செய்து கொண்டிருந்தார். அப்பொழுதே வாஜ்பாய், அந்த மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது காலைத் தொட்டு வணங்கினார் என தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தமிழ்நாடு சட்டமன்றத்தில் பகிர்ந்தார். இது பொய்யான தகவல் என சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
கிராமப்புற பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் சுய உதவி குழுக்கள் சிறுசேமிப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக செயல்பட்டதற்காக அறியப்பட்டவர் தான் மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை. இதற்காக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இடம் இருந்து ஸ்ரீ சக்தி பிரஸ்கார் விருது பெற்றார் அப்பொழுதுதான் வாஜ்பாய் காலில் விழுந்து வணக்கம் தெரிவித்தார். ஆனால் ஏதோ வாட்ஸ் அப் செய்தியில் வந்த தகவலை மாண்புமிகு வெற்றி அமைச்சர் மாண்புமிகு வெற்றி சட்டமன்றத்தில் இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார். இதில் கொடுமை என்னவென்றால் தமிழ்நாட்டின் பல முன்னணி ஊடகங்களும் அமைச்சர் பகிர்ந்த சுவாரசிய தகவல் என இந்த பொய்யான தகவலை செய்திகளாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
தவறான தகவல் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக இதைப் பகிர்கிறேன்.
— Vanathi Srinivasan (@VanathiBJP) August 26, 2026
மறைந்த முன்னாள் பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்கள், சின்னப்பிள்ளை வீட்டுக்கு வரவில்லை. மாறாக டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் தான் வயதில் தன்னைவிட இளையவரான, சின்னப்பிள்ளையின் காலை தொட்டு திரு.வாஜ்பாய்… pic.twitter.com/Hm603eV7ot
இதே செய்தியை குறிப்பிட்டு பாஜக மூத்ததலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “தவறான தகவல் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக இதைப் பகிர்கிறேன்.மறைந்த முன்னாள் பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்கள், சின்னப்பிள்ளை வீட்டுக்கு வரவில்லை. மாறாக டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் தான் வயதில் தன்னைவிட இளையவரான, சின்னப்பிள்ளையின் காலை தொட்டு திரு.வாஜ்பாய் வணங்கினார். இந்நிகழ்வு அன்றைய காலகட்டத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. கிராம மக்களிடையே, 'களஞ்சியம்' என்ற பெயரில், மகளிர் சுயஉதவி குழுக்களை உருவாக்கி நடத்தி சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்து பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தியதற்காக, சின்னப்பிள்ளை அவர்களுக்கு 'ஸ்திரீ சக்தி' என விருது வழங்கப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.