×

சிப்காட் சுவர் இடிந்து உயிரிழப்பு - தலா ரூ.30 லட்சம் நிவாரணம்

 

கடலூர், சிப்காட் தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் 2 பேருக்கு வேலை வழங்கவும் தொழிற்சாலை நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடலூர் சிப்காட் தொழிற்சாலை பகுதியில் ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதேபோல் சிப்காட் பகுதியில் உள்ள சங்ககொலிகுப்பம் என்ற பகுதியில் இந்தியன் பாஸ்பேட் என்ற ஒரு ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையின் ஒரு பகுதியில் கட்டுமான பணியும் நடைபெற்று வரும் நிலையில அந்த கட்டுமான பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை அந்த தொழிற்சாலை ஒரு பகுதி சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமான பெண் தொழிலாளர்கள் இருவர் சிக்கிக் கொண்டனர். உடனடியாக அங்கு இருந்தவர்கள் அவர்களை மீட்க துவங்கினர். இளமதி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பெண்ணான இந்திரா என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில அவரும் தற்போது உயிரிழந்தார்.

இந்நிலையில் கடலூர், சிப்காட் தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் 2 பேருக்கு வேலை வழங்கவும் தொழிற்சாலை நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் 2 பேருக்கு வேலை வழங்கவும் தொழிற்சாலை நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசு சார்பில் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.