×

நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு : ராமதாஸ் வரவேற்பு!

தமிழக அரசு நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியுள்ளதற்கு ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். நியாயவிலை கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதுகுறித்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிக்கையில், “விற்பனையாளர்களுக்கான காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதியம் கூட்டுறவு ரேஷன் கடைகளில் புதிதாக நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு, பணியில் சேர்ந்த ஒரு ஆண்டு மட்டும் தொகுப்பூதியம் வழங்கப்படும். விற்பனையாளர்களுக்கு தற்போது
 

தமிழக அரசு நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியுள்ளதற்கு ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

நியாயவிலை கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதுகுறித்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிக்கையில், “விற்பனையாளர்களுக்கான காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதியம் கூட்டுறவு ரேஷன் கடைகளில் புதிதாக நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு, பணியில் சேர்ந்த ஒரு ஆண்டு மட்டும் தொகுப்பூதியம் வழங்கப்படும். விற்பனையாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் தொகுப்பூதியமாக ரூ.5 ஆயிரம் என்பதிலிருந்து ரூ.6,250 ஆக வழங்கப்படும். தொகுப்பு ஊதியமான ரூ. 4,250 என்பதிலிருந்து ரூ.6,500 ஆகவும் மாற்றியமைத்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு ரூ. 8,600 முதல் 29 ஆயிரம் வரையும், கட்டுரைகளுக்கு ரூ.7,800 முதல் ரூ. 26 ஆயிரம் வரையும் காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது . அதேபோல் அடிப்படை ஊதியத்துடன் 100 சதவீதம் அகவிலைப்படியை சேர்த்து வரும் கூடுதல் 15 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கி அந்த தொகையை அடுத்த பத்து ரூபாய்க்கு முழுமையாக்கி, புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்றும் புதிய அடிப்படை ஊதியத்தில் 14 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நியாயவிலைக்கடைகளின் விற்பனையாளர்களுக்கும், கட்டுனர்களுக்கும் ரூ.1250 ஊதிய உயர்வை தமிழக அரசு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கு பணியில் சேர்ந்த ஓராண்டுக்குப் பிறகு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் பாராட்டத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.