வி.எஸ்.பாபுவுக்கு நுரையீரல் தொற்று.. அமைச்சர் தகவல்..!
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை வீழ்த்தி மிக பெரிய அதிர்ச்சி கொடுத்தவர் வி.எஸ். பாபு. கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் பாபு, நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரிலும் கலந்து கொண்டார்.
இதற்கிடையே 75 வி.எஸ். பாபுவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐசியூவில் தீவிர மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.சுவாச பிரச்சினைக்காக சிறப்பு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் வி.எஸ்.பாபுவுக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதால், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்ற அமைச்சர், வி.எஸ்.பாவுவிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வி.எஸ்.பாபு நலமுடன் உள்ளார். உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறினார். கடந்த 11ஆம் தேதி முதல் அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் MLA VS பாபு....நலமுடன் உள்ளார், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்..
— SUMI (@NSSumithra) September 14, 2026
- அமைச்சர் அருண்ராஜ் pic.twitter.com/Lk2VsaiquY