கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் வி.எஸ்.பாபு போட்டி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தவெஅ சார்பில் வி.எஸ்.போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து பல்வேறு முன்னணி கட்சியினரும் தங்களது கட்சி சார்பாக சட்டமன்ற தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இம்முறை தமிழகத்தில் முதன் முறையாக களம் இறங்கும் நடிகர் விஜய் துவக்கி உள்ள புதிய கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிப்பு இன்று நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தவெஅ சார்பில் வி.எஸ்.போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அவரை எதிர்த்து அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்த புரசை வி எஸ் பாபு களம் காண்கின்றார். இவர் அதற்கு முன்பு திமுகவில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. இதேபோல் பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய எம்.ஜி.ஆர். அண்ணா திமுகவில் இருந்து மிகச் சமீபத்தில் விலகிய ரஞ்சித்குமார், த.வெ.க. காஞ்சிபுரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.