×

இடஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்த 'சமூகநீதிக் காவலர்' - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!!

 

சமூகநீதி எனும் ஒளியை எங்கும் பரவச் செய்ய உறுதியேற்போம் என்று முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

1969 ஆம் ஆண்டு ஆண்டு உ.பி. சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார் வி.பி. சிங். 1971இல் முதல் முறையாக பாராளுமன்றத்துக்கு போட்டியிட்டு எம்.பி. ஆன இவர் 1974 ஆம் ஆண்டு இந்திராகாந்தி அமைச்சரவையில்  துணை வர்த்தக மத்திய அமைச்சர்  ஆனார்.

1980 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநில முதல்வராக பதவியேற்றார். முதல்வரானதும் வழிப்பறி, கொள்ளையை தடுக்க கடும் நடவடிக்கையை மேற்கொண்டார். முழுவதுமாக இக்கொள்ளையை தடுக்கமுடியாததால் இதற்கு தானே பொறுப்பேற்றுக்கொண்டு பதவி விலக முன்வந்தார். இவரின் இச்செய்கை இவருக்கு இந்தியா முழுவதும் பெயர் பெற்று தந்தது.  அத்துடன் டிசம்பர் 2, 1989 லிருந்து நவம்பர் 10 1990 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார்.
 


இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "கல்வி - வேலைவாய்ப்பில் நமக்கு மறுக்கப்பட்ட இடத்தில் நம்மை உட்கார வைக்க மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி இடஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்த 'சமூகநீதிக் காவலர்' #VPSingh பிறந்தநாளான இன்று #SocialJustice எனும் ஒளியை எங்கும் பரவச் செய்ய உறுதியேற்போம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.