×

டெண்டர் ஓட்டு போட்ட வாக்காளர்

 

கொடைக்கானலில் வாக்களிக்க வந்த பெண்ணிடம் ஏற்கனவே தங்களது பெயரில் வாக்கு செலுத்தப்பட்டது என  தெரிவித்ததால் அதிர்ச்சிக்குள்ளான அவர், டெண்டர் பேப்பர் பேலட் முறையில் வாக்களித்தார்.

கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பாரிஜா பேகம் என்பவர் 288 வது பாக எண்ணில் வாக்கு பதிவு செய்வதற்காக வந்தபோது அவரது வாக்கை ஏற்கனவே வேறொருவர் பதிவு செய்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த பாரிஜா பேகம் நான் வாக்களிக்கவில்லை, எப்படி என்னுடைய வாக்கைசெலுத்த அனுமதித்தீர்கள் என்று வாக்கு சாவடிக்குள் பிரச்சனை செய்தார். இதனையடுத்து பாரிஜா பேகத்திற்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக டெண்டர் பேப்பர் பேலட் பதிவு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளனர்.