×

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் டவுன்லோடு செய்யலாம்..! எப்படி தெரியுமா ? 

 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடக்கிறது. வாக்குகள் அனைத்தும் அன்றே எண்ணப்பட்டு மாலைக்குள் முடிவுவுகள் தொகுதி வாரியாக அறிவிக்கப்படும். ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இடங்களைப் பெறும் கட்சி, அடுத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தேதி அறிவிக்கும்.

இந்த நிலையில்,ஆன்லைனில் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை சில நிமிடங்களில் டவுன்லோடு செய்வது எப்படி என தெரிந்து வைத்துக் கொண்டால் உபயோகமாக இருக்கும. 

வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் வடிவில் (e-EPIC) பதிவிறக்கம் செய்வது மிகவும் எளிது. இதனை உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது கணினி மூலம் சில நிமிடங்களில் செய்துவிடலாம்.

1. டிஜிட்டல் வாக்காளர் அட்டையைப் பதிவிறக்கம் செய்ய நீங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்துக்கு செல்ல வேண்டும்.

2. அதாவது, முதலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சேவை இணையதளமான voters.eci.gov.in என்ற பக்கத்திற்குச் செல்லவும்.

3. உங்களிடம் ஏற்கனவே கணக்கு இருந்தால், உங்கள் மொபைல் எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி Login செய்யவும்.

4. புதிய பயனர் என்றால், 'Sign Up' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து புதிய கணக்கை உருவாக்கிக் கொள்ளவும்.

5. லாகின் செய்த பிறகு, முகப்புப் பக்கத்தில் உள்ள E-EPIC Download என்ற ஆப்சனைக் கிளிக் செய்யவும். இதனை செய்தவுடன் இப்போது உங்களிடம் இரண்டு விருப்பங்கள் இருக்கும். EPIC Number: உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்தால் அதை உள்ளிடலாம். நீங்கள் புதிய அட்டைக்கு விண்ணப்பித்திருந்தால், உங்களுக்கு வழங்கப்பட்ட Form Reference Number-ஐ பயன்படுத்தலாம்.

6. அட்டை எண்ணை உள்ளிட்ட பிறகு, உங்கள் மாநிலத்தைத் (Tamil Nadu) தேர்வு செய்து 'Search' பொத்தானை அழுத்தவும்.

7. உங்கள் திரையில் உங்கள் பெயர் மற்றும் வாக்காளர் அட்டை விவரங்கள் தோன்றும். கீழே உள்ள Send OTP என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு ரகசிய எண் (OTP) வரும். அதை உள்ளிட்டுச் சரிபார்க்கவும்.

8. OTP சரிபார்க்கப்பட்டதும், Download e-EPIC என்ற பொத்தான் தோன்றும். அதைக் கிளிக் செய்தால், உங்கள் வாக்காளர் அடையாள அட்டை PDF வடிவில் பதிவிறக்கம் செய்யப்படும்.

9. உங்கள் வாக்காளர் அட்டையுடன் தனித்துவமான மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

10. உங்கள் மொபைல் எண் இணைக்கப்படவில்லை என்றால், இணையதளத்தில் உள்ள e-KYC வசதியைப் பயன்படுத்தி முக அடையாளச் சரிபார்ப்பு மூலம் மொபைல் எண்ணை இணைத்துவிட்டுப் பிறகு பதிவிறக்கம் செய்யலாம்.

11. இந்த டிஜிட்டல் e-EPIC அட்டை, அசல் அட்டைக்கு நிகரான அங்கீகாரம் கொண்டது. இதனை நீங்கள் எடுத்து அடையாளச் சான்றாகப் பயன்படுத்தலாம்.