×

தவெக திடலில் முண்டியடித்து நுழைந்த தொண்டர்கள்- சேர்கள் உடைப்பு

 

தவெக திடலில் முண்டியடித்து நுழைந்த தொண்டர்களால், கடைசி 4 வரிசையில் இருந்த சேர்கள் உடைக்கப்பட்டன.


தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள் என அண்மையில் தவெக தலைவர் விஜய் டொண்டர்களுக்கு கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டிருந்தார். மேலும் எல்லாவற்றையும்விட தொண்டர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம் எனக் குறிப்பிட்டிருந்தார்.