×

தீ விபத்து...அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும் - சசிகலா வலியுறுத்தல்!

 

திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு முறைகள் சரியாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை உடனே ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்திட வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இதுவரை 6 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் மிகவும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் 32 நபர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.