×

விஷ்ணு விஷாலின் முதல் ₹50 கோடி படம்! நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த நடிகர் விஷ்ணு விஷால்!

 

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஜூலை 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘கட்டா குஸ்தி-2’. இயக்குநர் செல்வா அய்யாவு இயக்கியுள்ள இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இருவரின் இயல்பான நடிப்பும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

உறவுகளின் முக்கியத்துவம், திருமண வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் இருக்க வேண்டிய நம்பிக்கை, வாழ்க்கைத் துணையின் கனவுகளுக்கு மதிப்பளித்தல் எனப் பல்வேறு நல்ல கருத்துகளைக் கூறியுள்ளார் இயக்குநர். படம் முழுவதும் நகைச்சுவை இழையோடுவதால் ஒவ்வொரு காட்சிக்கும் திரையரங்குகளில் கைதட்டல் எழுகிறது.

இப்படி வசூல் ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் வசூலிலும் குறைவைக்கவில்லை. ‘கட்டா குஸ்தி-2’ படத்தின் வசூல் ரூ.55 கோடியை கடந்துள்ளது.

இப்படி வசூல் ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் வசூலிலும் குறைவைக்கவில்லை. ஜூலை 16ஆம் தேதி வரை ‘கட்டா குஸ்தி-2’ படத்தின் வசூல் ரூ.50 கோடியைக் கடந்துள்ளது.

இந்நிலையில் இந்த சாதனை வசூல் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டரில் தெரிவித்துள்ளாவது

"என் வாழ்க்கையின் முதல் ₹50 கோடி வசூல் சாதனை... என் வாழ்நாளில் நான் என்றும் மறக்க முடியாத தருணம்!

திரையரங்குகளுக்கு வருகை தந்து, டிக்கெட் எடுத்து, இத்திரைப்படத்தைக் கண்டு களித்து, சிரித்து, ஆரவாரம் செய்து 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தைக் கொண்டாடிய ஒவ்வொரு அன்பு ரசிகருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

நீங்கள் என் மீது காட்டும் இந்த அளவற்ற அன்புதான் என்னுடைய மிகப்பெரிய பலம். தொடர்ந்து இன்னும் கடுமையாக உழைக்கவும், மிகச் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து உங்களிடம் கொண்டு சேர்க்கவும், என்னுடைய முழு ஆற்றலையும் கொடுத்து உங்களை எப்போதும் மகிழ்விக்கவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் முதல் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகமாக உருவான 'கட்டா குஸ்தி 2' படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

குடும்பங்கள் கொண்டாடும் வகையில் முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் ஆக்‌ஷன் பின்னணியில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், வெளியான நாள் முதலே திரையரங்குகளில் நல்ல வசூல் ஈட்டி வருகிறது.

My first ₹50 crore grosser… and a moment I'll never forget..

To everyone who bought a ticket, laughed, cheered, and celebrated #GattaKusthi2 - thank you from the bottom of my heart.

Your love is my biggest strength. I'll continue working harder, telling better stories, and… pic.twitter.com/ZKAjOZEvmk

— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) July 21, 2026


 

My first ₹50 crore grosser… and a moment I'll never forget..

To everyone who bought a ticket, laughed, cheered, and celebrated #GattaKusthi2 - thank you from the bottom of my heart.

Your love is my biggest strength. I'll continue working harder, telling better stories, and… pic.twitter.com/ZKAjOZEvmk

— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) July 21, 2026