×

“ஜனநாயகன் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று நம்புகிறேன்”- விஷால்

 

ஜனநாயகன் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று நம்புவதாக நடிகர் விஷால் கருத்து கூறியுள்ளார்.

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் சில காட்சிகள் மட்டுமே முதலில் கசிந்த நிலையில், நேற்று இரவு முழு படத்தையும் சட்டவிரோதமாக  சமூக வலைதளங்களில் சிலர் வெளியிட்டனர். முதலில் ஓரிரு காட்சிகள் மட்டும் வெளியான நிலையில், இரவு முழு திரைப்படமும் வெளியானது. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஜனநாயகம் திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் கிரைமில் படக்குழு தரப்பில் புகார் அளித்துள்ளது. 

இந்நிலையில் நடிகர் விஷால் தனது எக்ஸ் தளத்தில், “அன்புள்ள விஜய், உங்கள்/எங்கள் Jananayagan படத்தின் லீக் வீடியோக்களை பார்க்கும்போது மிகவும் மனம் உடைகிறது. இவ்வளவு உழைப்பு, அர்ப்பணிப்பு, முயற்சி எல்லாம் வீணாகும் போல தோன்றுகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக உங்கள் ரசிகனாக, உங்கள் படங்களை திரையரங்குகளில் பார்த்து, என் பிடித்த நடிகருக்கு விசில் அடித்து கொண்டாடிய ஒவ்வொரு தருணத்தையும் ரசித்திருக்கிறேன். இப்போதும் அதே மாதிரி செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் படம் OTT அல்லது சாட்டலைட் வழியாக வெளியானாலும், வீட்டிலேயே நான்கு சுவர்களுக்குள் தான் பார்க்க வேண்டிய நிலை வந்தாலும், அந்த ஒரே வித்தியாசம் — நம்ம வீட்டிலேயே நம்ம பிடித்த நடிகருக்கு விசில் அடிப்பதுதான். இது தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகவும் கடினமான, முக்கியமான நிதி முடிவு என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனாலும் ஒரு ரசிகனாக என் உணர்வுகளை பகிர விரும்பினேன். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று நம்புகிறேன். இது பெரிய சர்ச்சை என நான் நினைக்கவில்லை, ஆனால் மதிப்பிற்குரிய சென்சார் வாரியத்திற்கும் அவர்களுடைய காரணங்கள் இருக்கும்.நாம் எல்லோரும் விரைவில் இந்த படத்தை சட்டபூர்வமாக பார்க்க முடியும் என்று நம்புகிறேன். இறைவன் அருள் புரியட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.