×

#BREAKING நொடி பொழுதில் துடிதுடித்து உயிரிழந்த 22 உயிர்! விருதுநகரில் சோகம்

 

விருதுநகர் அருகே வனஜா பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் அருகே உள்ளது கட்டனார்பட்டி. இங்கு கோவிந்த நல்லூரைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இது மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும் இந்த பட்டாசாலையில் விடுமுறை தினமான நேற்று 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். சரவெடி பின்னும் ஒரு அறையில் திடீரென உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. வெடிச்சத்தம் கேட்ட தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியே தப்பி ஓடினர். இந்த வெடி விபத்தில் 4 அறைகள் சேதமடைந்தன. 22 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்கள் யார் என்பது குறித்து உடனடியாக அடையாளம் கண்டறிய முடியவில்லை.

இந்த விபத்தில் சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் (51), சாரதா (40), திருத்தங்களைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (56), சேர்வைக்காரன் பட்டியை சேர்ந்த வீரபத்திரன் (45), இவரது மனைவி சங்கிலித் தங்கம் (40), கோவிந்தன் நல்லூரைச் சேர்ந்த அருண்குமார் (23), ஆதிப்பட்டியைச் சேர்ந்த வாழவந்தான் என்பவரது மகன் கதிஷ் (14) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் ஆறு பேரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்வு ஏற்பட்டதால் பட்டாசு தொழிலாளர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்து குறித்து வச்ச காரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.