×

வைரலான பரதநாட்டியம்- அரசுப் பள்ளி மாணவனின் வாழ்கையே மாறிய நெகிழ்ச்சி

 

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவர் மதியழகனின் பரதநாட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பல லட்சம் பார்வைகளைப் பெற்றது.

பயிற்சியே இல்லாமல் அசத்தும் பரதநாட்டியம், விருத்தாசலம் மாணவன் மதியழகன்..👇 pic.twitter.com/7eyLzkTNZh

— நீதிமான் (@Neethiman3) August 21, 2026


விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவர் மதியழகனின் பரதநாட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பல லட்சம் பார்வைகளைப் பெற்றது. மாணவர் மதியழகனின் திறமையைப் பாராட்டி, பத்மஸ்ரீ விருது பெற்ற நர்த்தகி நடராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். மதியழகனை வரும் 30-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் தனது பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு அழைத்து கவுரவிக்க நர்த்தகி நடராஜ் முடிவு செய்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் தனது ‘வெள்ளியம்பலம் டிரஸ்ட் – ஸ்கூல் ஆப் டான்ஸ்’ மூலம் மாணவருக்கு முறையாக பரதநாட்டியம் கற்றுத்தரவும் உறுதியளித்துள்ளார். மாணவரின் கல்வி பாதிக்காத வகையில் கலைப் பயணத்துக்கும் ஊக்கமும் வழிகாட்டுதலும் வழங்கப்படும் என நர்த்தகி நடராஜ் தெரிவித்துள்ளார்.