Boy Friends- கள் செய்த வன்முறை... நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு
நுங்கம்பாக்கத்தில் மாணவிகளை, ஆண் நண்பர்கள் சந்திக்க குடியிருப்புவாசிகள் எதிர்ப்பால் கார், பைக்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்திய இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கம், புஷ்பா நகரில் வசிக்கும் இரண்டு மாணவிகளை அடிக்கடி அவர்களது ஆண் நண்பர்கள் பார்க்க வருவதாக அப்பகுதியில் குடியிருப்போர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குடியிருப்புப் பகுதிக்கு எதிரே எரியும் பொருள் வீசப்பட்டதில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் லேசாகச் சேதமடைந்தன. இச்சம்பவத்தில் தொடர்புடைய சூரஜ் என்பவரை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைக் கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டு, காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாகப் பொதுமக்கள் தவறான தகவல்களையோ அல்லது வதந்திகளையோ பரப்ப வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், திமுக நிர்வாகி வெங்கடேசனின் வாகனங்கள் சேதமடைந்தது தெரியவந்துள்ளது.