×

விநாயகர் சதுர்த்தி விழா – ஓபிஎஸ் – ஈபிஎஸ் வாழ்த்து!!

விநாயகர் சதுர்த்தி திருவிழா, நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வீடுகளில் பொதுமக்கள், விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப்
 

விநாயகர் சதுர்த்தி திருவிழா, நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வீடுகளில் பொதுமக்கள், விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளில் பக்தியுடனும், மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மக்கள் நற்காரியங்களை தொடங்கும்போது தங்குதடையின்றி சிறப்புடன் நடைபெற விநாயகப் பெருமானை முதலில் போற்றி வணங்குவர் . விநாயகரை துதித்து நற்காரியங்களை மேற்கொண்டால் வெற்றியை விளையும் என்பது மக்களின் ஏகோபித்த நம்பிக்கையாகும்.

முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமானின் அவதார திருநாளாம் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாருக்கு எருக்கம்பூ மாலை அணிவித்து, அவருக்கு பிடித்தமான சுண்டல், கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, கரும்பு போன்ற பொருட்களைப் படைத்து, அருகம்புல், செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து விநாயகப் பெருமானை மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள். ஞானமே வடிவான திருமேனியைக் கொண்ட விநாயகப் பெருமானின் திருவருளால் உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிலவட்டும். நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும், வீடெங்கும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் தவறு என்று வாழ்த்தி விநாயகர் சதுர்த்தி திருநாளில் விமர்சையாக கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா ஆகியோரது வழியில் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை அன்போடு உரித்தாக்கிக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.