×

’இது 10-வது ஆண்டு’ மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாராட்டை பெறும் விழுப்புரம் அரசுப் பள்ளி ஆசிரியர்!

உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்று மைக்ரோசாப்ட். அது கல்வியில் தனிக் கவனம் செலுத்தி, அதில் சிறப்பாகச் செயல்படுபவர்களைப் பாராட்டி ஊக்குவித்து வருகிறது. அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து பத்தாண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாராட்டையும் சான்றிதழையும் பெற்றவர் விழுப்புரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் ஸ்ரீ. திலிப் ’இந்தப் பாராட்டு எப்படிச் சாத்தியமானது?’ ஆசிரியர் திலிப்பிடம் கேட்டேன். ”மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகெங்கும் உள்ள ஆசிரியர்களில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி
 

உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்று மைக்ரோசாப்ட். அது கல்வியில் தனிக் கவனம் செலுத்தி, அதில் சிறப்பாகச் செயல்படுபவர்களைப் பாராட்டி ஊக்குவித்து வருகிறது. அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து பத்தாண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாராட்டையும் சான்றிதழையும் பெற்றவர் விழுப்புரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் ஸ்ரீ. திலிப்

’இந்தப் பாராட்டு எப்படிச் சாத்தியமானது?’ ஆசிரியர் திலிப்பிடம் கேட்டேன்.

”மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகெங்கும் உள்ள ஆசிரியர்களில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்கள் வகுப்பறையில்  கற்றல் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கவும்.  ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தலை தகவல் தொழில்நுட்பத்துடன் இணைத்து கற்பிக்கும் சான்றிதழ் படிப்புகளை இலவசமாக ஆன்லைனில் கற்க www.education.microsoft.com என்னும் இணையதளத்தில் ஆசிரியர்கள்  தங்களை பதிவு செய்து கொண்டு கற்கவும் கருத்துக்களை உலகெங்கும் உள்ள ஆசிரியர்களுடன் பகிர வாய்ப்பு அளிக்கிறது.

இந்த இணைய சான்றிதழ் படிப்பில் 120 க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை நான் பெற்றுள்ளேன்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் சர்வேதேச கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பை  2013ல் அமெரிக்காவில் நடைபெற்ற கருத்தரங்கில் மற்றும்  2019 பாரிஸில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பை வழங்கியது.

இந்த ஆண்டு MIE(Microsoft Innovative Educator) பட்டத்திற்கு உலகெங்கும் இருந்து 23, 000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் படிப்படியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.   தொடர்ந்து பத்தாவது ஆண்டாக எனக்கு இந்த சான்றை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது  மைக்ரோசாப்ட் நிறுவனம். தமிழகத்தில் இருந்து இளவரசன், மனோகர், ரமேஷ், சரவணன், கருணைதாஸ், விஜயகுமார், ஆதிகேசவன், ஐயப்பன் இன்னும் பல ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என நம்புகிறேன்” என்றார்.

அரசுப் பள்ளிகள் என்றாலே சமூகத்தில் தரம் குறைந்தவை என்ற பொதுப்புத்தி நிலவுகிறது. ஆனால், ஒரு மாணவரின் கல்விக்கு எனத் தொகை ஏதும் வசூலிக்காமல், அம்மாணவருக்குத் தேவையான பொருள்களையும் இலவசமாகக் கொடுப்பது அரசுப் பள்ளிகளே. அங்கே உலகில் மிகப் பெரிய நிறுவனங்களின் பாராட்டுப் பெற்றை திலிப் போன்ற ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுவே அரசுப் பள்ளியின் தரத்திற்கு ஓர் உதாரணம்.