×

வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தீவிர வாக்குசேகரிப்பு

 

சென்னை வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

 சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் பிரதான போட்டியாக களம் காணும் தொகுதிகளில் ஒன்றாக வில்லிவாக்கம் மாறியிருக்கிறது. இங்கு தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். இவருக்கு போட்டியாக திமுக சார்பில் கார்த்திக் மோகன் களம் காண்கிறார். இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் நெருங்கிய நண்பராவார். அண்மையில் கார்த்திக் மோகனுக்காக சபரீசனே களத்தில் இறங்கி வாக்கு சேகரித்தார். அதிமுக சார்பில் எஸ்.ஆர்.விஜயகுமார் போட்டியிடுகிறார்.  எனவே இந்த தொகுதியை பொறுத்தவரை மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. இதனால் மூன்று பேரும் தங்களது பலத்தை காட்டும் விதமாக பரபரப்பாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்