கொலை, கொள்ளை, ஆள் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு தவெகவில் சீட்- ஊர் மக்கள் எதிர்ப்பு
கஞ்சா வழக்கில் 10 நாட்களுக்கு முன் ஜாமினில் வந்தவருக்க தவெகவில் சீட் வழங்கப்பட்டுள்ளது.
கஞ்சா வழக்கில் 10 நாட்களுக்கு முன் ஜாமினில் வந்தவருக்க தவெகவில் சீட் வழங்கப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் கைதாகி 10 நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்த சந்திரகாண்டிபன் என்பவருக்கு தவெகவில் பேராவூரணி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளில் ட்தொடர்புடையவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு உள்ளூர் நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
அதுமட்டுமின்றி சந்திரகாண்டிபன் என்பவர் மேல் 10க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற வழக்குகள் உள்ளது. அதுமட்டுமல்லாது 13 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட வழக்கில் இருந்து 10 நாட்களுக்கு முன்புதான் ஜாமினில் வெளிவந்துருக்கிறார். அத்துடன் பட்டுக்கோட்டை தவெக வேட்பாளர் ஏனாதி மதன் மீது பாலியல் வழக்கு உள்ளது. அவ்வழக்கில் A1 குற்றவாளியே ஏனாதி மதன்தான். இதை கண்டித்து வெள்ளாளர் முன்னேற்ற கழகம், முத்தரையர் கூட்டமைப்பு, சமூகநீதி கூட்டமைப்பு அமைப்புகள் இந்த வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.