×

ஊர் கிணற்றை ஆக்கிரமித்ததாக அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது கிராமத்தினர் புகார்

 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பனைவிளை கிராமத்தில் 60 ஆண்டுக்கும் மேல் பழமையான ஊர் கிணற்றை ஆக்கிரமிப்பு செய்ததாக தவெக அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் பனைவிளை கிராமத்தில் 60 ஆண்டுக்கும் மேல் ஊர் கிணறு ஒன்று இருந்தது. அதனை மக்கள் குடிநீருக்காக இருந்தது. இப்போது அந்த இடம் எங்களுடையது என அமைச்சராக பதவியேற்று இருக்கும் ஜெகதீஸ்வரியின் அப்பா வேலி போட்டு வைத்துள்ளார் என கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால் அந்த இடத்தை பயன்படுத்த முடியாமல் மிகவும் அவதி படுவதாகவும், இதுகுறித்து ஜெகதீஸ்வரியிடம் மனு கொடுத்தபோது, அது எங்களுடைய இடம், நாங்கள் கொடுக்கமாட்டோம், எங்கள் தாத்தா எங்களுக்கு எழுதி கொடுத்துவிட்டார்கள் என சொல்லி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பனைவிளை கிராமத்தினர் கூறுகின்றனர். காவல்துறையினரை வைத்து மிரட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்ற்னார்.