×

லட்சங்களில் வந்த ஆஃபரை நிராகரித்த வில்லேஜ் குக்கிங் சேனல்!

 

பிரபல யூட்டியூப் சேனலான வில்லேஜ் குக்கிங் சேனல் தனியார் சாக்கலேட் நிறுவனம் விளம்பரத்திற்காக நான்கரை லட்சம் ரூபாய் தருவதற்கு முன் வந்த நிலையில், அதனை நிராகரித்துள்ளது. 

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது அவர்களிடம் நேர்காணல் ஒன்று நடத்தப்பட்டது. அப்போது விலேஜ் குக்கிங் சேனலை சேர்ந்த சுப்பிரமணியன் பேசும் போது, சேவை நோக்கத்துடன் மட்டுமே நாங்கள் இந்த தொழிலை நடத்தி வருவதாக கூறினார். விக்ரம் திரைப்படத்தில் நடித்ததற்காக ஒரு பைசா கூட வாங்கவில்லை.