×

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம்: வசமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்!

வேலூர் அருகே பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ.2,500 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் ரேவதி கைது செய்யப்பட்டிருக்கிறார். வேலூர் மாவட்டம் அணைகட்டு தாலுக்கா இலவன்பாடி கிராமத்தில் வசித்து வருபவர் நடராஜ். இவருக்கு சொந்தமான நிலத்தின் பட்டா, அவரது உறவினரின் பெயரில் இருப்பதால் அதனை மாற்றம் செய்வதற்கு அப்பகுதி கிராம நிர்வாக அலுவலகராக பணியாற்றி வரும் ரேவதியை அணுகியிருக்கிறார். அப்போது ரேவதி, ரூ.2,500 லஞ்சம் கொடுத்தால் பட்டா மாற்றம் செய்து தருவதாக கூறியிருக்கிறார். அதனை கொடுக்க மறுத்தால்,
 

வேலூர் அருகே பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ.2,500 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் ரேவதி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

வேலூர் மாவட்டம் அணைகட்டு தாலுக்கா இலவன்பாடி கிராமத்தில் வசித்து வருபவர் நடராஜ். இவருக்கு சொந்தமான நிலத்தின் பட்டா, அவரது உறவினரின் பெயரில் இருப்பதால் அதனை மாற்றம் செய்வதற்கு அப்பகுதி கிராம நிர்வாக அலுவலகராக பணியாற்றி வரும் ரேவதியை அணுகியிருக்கிறார். அப்போது ரேவதி, ரூ.2,500 லஞ்சம் கொடுத்தால் பட்டா மாற்றம் செய்து தருவதாக கூறியிருக்கிறார். அதனை கொடுக்க மறுத்தால், பட்டா மாற்றம் செய்ய முடியாது என ரேவதி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பணத்தை கொடுக்க ஒப்புக் கொண்ட நடராஜ், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அந்த புகாரின் பேரில், நடராஜிடன் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அனுப்பிய போலீசார், ரேவதி அந்த பணத்தை பெறும் போது கையும் களவுமாக கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு அலுவலர்கள் இவ்வாறு லஞ்சம் பெறுவது, அரசின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.