``மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள்''- கமல்ஹாசனுக்கு விஜய் வாழ்த்து
Nov 6, 2026, 21:10 IST
நாளை பிறந்தநாள் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு CM விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்நாளை பிறந்தநாள் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், " அன்பிற்கினிய திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு, தங்களின் 07.11.2026-ஆம் தேதிய பிறந்தநாளையொட்டி, என்னுடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவும், தாங்கள் கலைத்துறை மற்றும் பொது வாழ்வில் மேலும் பல சிறப்புகளைப் பெற்று, மக்களுக்கான தங்கள் அர்ப்பணிப்பான பணிகளைத் தொடர்ந்து சிறப்புடன் ஆற்றிட என் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.