விஜய் அரசு வேலை தருவது அதிகார துஷ்பிரயோகம்-கம்யூ. தலைவர் எதிர்ப்பு!
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என சிபிஐ எம்.பி. சுப்பராயன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்று 50 நாட்கள் கடந்துள்ள நிலையில், நாளைய தினம் (அதாவது இன்று)கரூருக்கு செல்லவுள்ளார் ஜோசப் விஜய். இதனையடுத்து கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புகள் கிளப்பியுள்ளது. தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு விஜய் உதவலாம். அரசு பணிகள் வழங்குவது தவறான முடிவு என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கு சிபிஐ எம்பி கே. சுப்பராயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.சுப்பராயன் எம்.பி.வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,
“இந்த முடிவை அதிகாரத் துஷ்பிரயோகம் என்றே வரலாறு பதிவு செய்யும். மேலும் எதிர்காலத்தில் அரசிற்கு கடும் நெருக்கடிகளை இந்த முடிவு ஏற்படுத்தும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
”இழப்பை ஈடுகட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் சம்பந்தப்பட்ட கட்சிகளைச் சார்ந்ததாகும். அவைதான் அதைச் செய்ய வேண்டும்.
அதைச் செய்வதற்கு முழுத் தகுதி படைத்த கட்சிதான் த.வெ.க. அந்தப் பொறுப்பை நிறைவேற்றி முடிக்காமல் தட்டிக் கழித்துவிட்டு, அதை, அரசின் தலையில் சுமத்துவதை ஜனநாயக அரசியல் அமைப்பு ஏற்காது. த.வெ.க. அரசு ஆழமாக சிந்திக்க வேண்டும்.” என்றும் சுப்பராயன் கூறியிருக்கிறார்.
News Tamil 24x7 News Update | தவெக ஆழமாக சிந்திக்க வேண்டும்!
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) July 9, 2026
அரசியல் கட்சிகளால் ஏற்பாடுசெய்து நடத்திய கூட்டநெரிசல்களில் ஏற்படும் மரணங்களுக்கு, அரசு வேலை வழங்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும்
இந்த முடிவை அதிகாரத்துஷ்பிரயோகம் என்றே வரலாறு பதிவு செய்யும். மேலும்… pic.twitter.com/rjorFN0EcH
News Tamil 24x7 News Update | தவெக ஆழமாக சிந்திக்க வேண்டும்!
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) July 9, 2026
அரசியல் கட்சிகளால் ஏற்பாடுசெய்து நடத்திய கூட்டநெரிசல்களில் ஏற்படும் மரணங்களுக்கு, அரசு வேலை வழங்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும்
இந்த முடிவை அதிகாரத்துஷ்பிரயோகம் என்றே வரலாறு பதிவு செய்யும். மேலும்… pic.twitter.com/rjorFN0EcH
இந்த முடிவினை அதிகார துஷ்பிரயோகம் என்றே வரலாறு பதிவு செய்யும் எனவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தொடர்ந்து அரசிற்கு எதிர்காலத்தில் இந்த முடிவு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தும். இழப்பினை ஈடுகட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் சம்பந்தப்பட்ட கட்சிகளை சார்ந்ததாகும். அவைதான் அதை செய்ய வேண்டும். அப்படி ஈடு செய்வதற்கான முழுத்தகுதி படைத்த கட்சிதான் தவெக.
அந்த பொறுப்பினை நிறைவேற்றி முடிக்காமல் தட்டிக் கழித்துவிட்டு, அரசின் தலையில் அந்த பொறுப்பை சுமத்துவதை ஜனநாயக அரசியல் அமைப்பு ஏற்காது. இதுக்குறித்து தவெக அரசு ஆழமாக சிந்திக்க வேண்டும். இவ்வாறு தன்னுடைய பதிவில் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் சிபிஐ எம்பி சுப்பராயன். அவருடைய பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அதோடு தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ள சிபிஐ தரப்பில் இருந்து எதிர்ப்புக்குரல் வந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கரூர் இடைத்தேர்தலை மனதில் வைத்தே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கும் முடிவினை தவெக அரசு எடுத்துள்ளது. இது மலிவான வாக்கரசியல். முதல்வராக பொறுப்பேற்று 50 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காத முதல்வர் ஜோசப் விஜய், தற்போது இடைத்தேர்தலை மனதில் வைத்து அரசு பணி வழங்குவதாக கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.