நாளை விஜய் பரப்புரை: பயணத் திட்டம் வெளியானது!
Sep 26, 2025, 14:07 IST
சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட பிரசாரத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கியுள்ளார். அவர் வார இறுதி நாட்களில் தமிழகத்தின் மாவட்டம்தோறும் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் நாளை (செப்.27) கரூர் மற்றும் நாமக்கல் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை செய்ய உள்ளார்.
இந்நிலையில், பரப்புரை திட்டங்களை தவெக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல், கே. எஸ். திரையரங்கம் அருகில் காலை 8:45 மணிக்கும், கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் மதியம் 12:00 மணிக்கும் பரப்புரை மேற்கொள்கிறார்.
இதற்கான பணிகளை மேற்கொள்ள தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது