விஜயின் ஜோதிடர் கணிப்பு : '2031 தேர்தலில் விஜய் vs தனுஷ் தான்'..!
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வர முடிவெடுத்தால் திமுக, அதிமுக இரண்டும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அவர் நேரடியாக இரண்டாம் இடத்துக்கு வருவார் என்றும், ஒருகட்டத்தில் தேர்தல் "விஜய் VS தனுஷ்" போட்டியாக மாறும் வாய்ப்பு அவரது ஜாதகத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.2031 சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் விஜய்யை எதிர்கொள்ள திமுகவும், அதிமுகவும் இணைந்துதான் வர வேண்டிய சூழல் உருவாகும் என்று முதலமைச்சர் விஜயின் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா முதல் விஜயகாந்த், கமல், ஆரம்பித்து விஜய் வரை திரை நட்சத்திரங்களின் அரசியல் பிரவேசம் தமிழக மக்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது... அந்த வரிசையில் இப்போது நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த விவாதங்களும் முளைத்துள்ளன.
நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் திரண்ட நிகழ்வில், தனுஷின் அரசியல் எதிர்காலம் குறித்தும், 2031ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் குறித்தும் ரசிகர்கள் எழுப்பிய குரல், கோடம்பாக்கத்தையும் கடந்து புனித ஜார்ஜ் கோட்டை வரை எதிரொலிக் தொடங்கியுள்ளது.
ரசிகர்களின் ஆவேச குரல் இப்படி ஒலித்துக் கொண்டிருக்க, இன்னொருபுறம் பிரபல ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் வெளியிட்ட கணிப்பு இந்த விவாதத்திற்கு இன்னும் கூடுதல் எண்ணெயை ஊற்றியிருக்கிறது. தனுஷின் ஜாதகத்தை நேரடியாக ஆய்வு செய்திருப்பதாக சொல்லும் ஜோதிடர், தனுஷின் ஜாதகத்தில் அரசியலில் பிரகாசிப்பதற்கான உன்னதமான யோகம் வலுவாக உள்ளதாக உறுதியாக கூறுகிறார்,
வரவிருக்கும் தேர்தல்களில் நடிகர் விஜயின் அரசியல் வருகையை எதிர்கொள்ளப் பிரதான கட்சிகள் யோசித்து வரும்போது, தனுஷ் அரசியலுக்குள் காலடி வைத்தால் தமிழக அரசியலின் பிரதான எதிர்க்கட்சி இடமான 2வது இடத்தை மிக எளிதாக பிடித்துவிடுவார் என்றும், எதிர்காலத் தமிழக அரசியல் களம் என்பது "விஜய் vs தனுஷ்" என்ற நேரடிப் போட்டியாக மாறுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் ஜோதிடர் கணித்துள்ளார். ஜோதிடர் இப்படி சொன்ன விஷயம்தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது..