விஜயின் அதிரடி 7 வாக்குறுதிகள்!
கன்னியாகுமரியில் TVK'S AGENDA FOR 21ST CENTURY GOOD GOVERNANCE என 7 வாக்குறுதிகளை வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்.
1. ஒவ்வொரு குடும்பத்திற்கும் Tamil Nadu citizen privilege card வழங்கப்படும். லஞ்சம் இல்லாமல் அரசு நலத்திட்டங்கள் வீட்டிற்கு கொண்டு வர இது உதவும்.
2. தவெக அரசமைந்த ஆறு மாதத்தில், Tamil Nadu Rights to services act சட்டம் இயற்றப்படும். Vetri Tamilnadu Super App மூலம் அரசன் சேவைகள் பெறுவதை உறுதி செய்யலாம். சேவைகளை தாமதிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
3. Tamilnadu real time government dashboard for accountable governance உருவாக்கப்படும். பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் அதனுடைய பயன்பாடு செலவினங்களை நேரடியாக மக்களால் கண்காணிக்க முடியும்.
4. Citizens as partners in Governance: http://myvetritamilnadu.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு மக்கள் நேரடியாக மாநில வளர்ச்சிக்கான யோசனைகள் கொள்கை முடிவுகளை ஆலோசனைகளாக அளிக்க வழிவகை செய்யப்படும்.
5. மக்கள் அரங்கம் உருவாக்கப்படும். குடிமக்கள் நேரடியாக இதன் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு மனு அனுப்பலாம். 10,000 பேர் கையெழுத்து போட்ட மனு வந்தால் அரசாங்கம் அதற்கு பதில் அளிக்க வேண்டும். 5 லட்சம் பேர் கையெழுத்து போட்ட மனு வந்தால் சட்டமன்றத்தில் அது கண்டிப்பாக விவாதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்துடரிலும் ஒரு நாள் இதற்காக ஒதுக்கப்படும்.
6. தமிழ்நாட்டை AI & Digital Capital of India ஆக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். AI University நிறுவப்படும். நாட்டில் முதல்முறையாக தமிழ்நாட்டில், Ministry of AI உருவாக்கப்படும். மதுரை கோவை திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 1000 Deep-tech நிறுவனங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
7. நிதி வருவாய் ரீதியிலாக தமிழ்நாடு செழிப்புறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஒரு ரூபாய் கூடுதல் வரி வராமல், கடன் குறைப்பு செய்யவும் வருவாய் ஏற்றம் அடையவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.