×

விஜயகாந்த் உடல்நிலை : மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!

தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து அவரது மனைவியும், பொருளாளருமான பிரேமலதாவுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்த் மற்றும் அவரின் மனைவி பிரேமலதா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செப்டம்பர் 28ஆம் தேதி கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு
 

தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து அவரது மனைவியும், பொருளாளருமான பிரேமலதாவுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் விஜயகாந்த் மற்றும் அவரின் மனைவி பிரேமலதா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செப்டம்பர் 28ஆம் தேதி கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நோய் தொற்று உறுதியாகி சென்னை மியாட் மருத்துவமனையில் செப்டம்பர் 29ஆம் தேதியன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார் உள்ளார். பிரேமலதா விஜயகாந்த் முதல் நிலை பரிசோதனைக்குப் பின் தேமுதிக நிறுவனர் தலைவர் மற்றும் கழக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை. தொடர் மருத்துவ சேவைகளினால் அவர் நல்ல முன்னேற்றம் அடைந்து இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளது.