" பிறக்கிற குழந்தை கூட அம்மா, அப்பா என்று அழைத்த பின் 'விஜய்' மாமா என்றுதான் அழைக்கிறது”- விஜயபாஸ்கர்
தவெக அன்புத் தம்பிகள் யாரும் கவலைப்பட வேண்டாம். இனி எது வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
விராலிமலையில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “தேர்தல் நேரத்தில் சத்தம் இல்லாமல் விசில் அடித்த எனது அன்புத் தம்பிகள் தற்போது சத்தத்தோடு விசில் அடிக்கின்றனர். இன்று 3 வயது குழந்தை கூட, ஏன் பிறக்கிற குழந்தை கூட அம்மா அப்பா என்று அழைத்த பின் விஜய் மாமா என்றுதான் அழைக்கிறது. நாம் எந்த விதமான வம்பு சண்டைக்கும் போவதில்லை. ஆனால் வந்த சண்டையை விடுவதில்லை.தவெக அன்புத் தம்பிகள் யாரும் கவலைப்பட வேண்டாம். இனி எது வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அதிமுகவை விட்டு விலகி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்தார். அவருடன் அதிமுகவிலிருந்து விலகி வந்த பல மூத்த நிர்வாகிகளுக்கு இதுவரை எந்தப் பொறுப்பும் வழங்கப்படாததால் கட்சிக்குள் அதிருப்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.