×

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி: சதா நாடார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி விவகாரத்தில் திருவான்மியூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருபவர் நடிகை விஜயலட்சுமி. இவர், சீமான் மற்றும் ஹரி நாடார் ஆகியோர் தன்னை மிரட்டுவதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்றார். இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வீடு வந்தார். விஜயலட்சுமி தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்கு
 

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி விவகாரத்தில் திருவான்மியூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருபவர் நடிகை விஜயலட்சுமி. இவர், சீமான் மற்றும் ஹரி நாடார் ஆகியோர் தன்னை மிரட்டுவதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்றார். இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வீடு வந்தார். விஜயலட்சுமி தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சீமான், ஹரி நாடார் தூண்டுதலின் பேரில் சதா நாடார் என்பவர் மிரட்டியதாக நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில், சதா நாடார் என்பவர் மீது திருவான்மியூர் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், பெண்ணை களங்கபடுத்தும் விதமாக பேசுதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் என மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக திருவான்மியூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.