×

"2 நாட்களுக்கு முன்பு கூட சமாதான தூது விட்டார் சீமான்" - நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ வெளியீடு

 

சீமானுக்கு எதிரான பலாத்கார வழக்கு சூடுபிடித்துள்ள நிலையில் சரமாரியான கேள்விகளுடன் நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும்,  விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவால் மீண்டும் சூடு பிடித்துள்ளது.