#BREAKING “விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை" - மருத்துவமனை தகவல்!!
விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்று மியாட் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது . இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது.என்று குறிப்பிட்டுள்ளது.