விஜயகாந்த் பிறந்த நாள்: புகழ் வணக்கம் செலுத்திய முதலமைச்சர் விஜய்..!
தே.மு.தி.க. நிறுவன தலைவரும் நடிகருமான மறைந்த விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அவரை அரசியல் தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
தேமுதிக நிறுவனர் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு முதலமைச்சர் விஜய் புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார். அவரது பதிவில்,
மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்! என புகழாரம் சூட்டியுள்ளார்.
மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 25, 2026
திரைத்துறையில்… pic.twitter.com/hH9qLSXkbw