நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைத்திட வேண்டும் - நடிகர் ராம்கி
Dec 29, 2023, 13:37 IST
நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்தின் பெயர் வைக்க வேண்டும் என்று நடிகர் ராம்கி வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , ஹீரோக்கள் பொதுப் பிரச்சினைகள் தலையிட மாட்டார்கள் என்ற நிலை இருந்த போது எந்த பிரச்னை என்றாலும் முதலில் களத்தில் இறங்கி நிற்பவராக விஜயகாந்த் இருந்தார். அவருக்கு பயமே கிடையாது.
நடிகர் சங்க பிரச்னைகளை தீர்த்து கடன்களை அடைத்து அதற்கு ஒரு வழிகாட்டியவர் விஜயகாந்த் . எல்லா நடிகர்களின் ரியல் ஹீரோ அவர் தான். அவரது குணத்தினாலும், திறமையினாலும்தான் அவருக்கு இந்த பெயர் கிடைத்தது. அவர் கூடப் பிறக்காத அண்ணன் போன்றவர். விஜயகாந்தின் பெயரை நடிகர் சங்க கட்டிடத்துக்கு வைப்பது அவருக்கு செலுத்தும் நன்றி என்றார்.