அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது - விஜயகாந்த்
Aug 13, 2023, 12:36 IST
நாங்குநேரியில், சாதிய மோதலில் 12 வகுப்பு மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட சாதிய பாகுபாடு காரணமாக 12-ஆம் வகுப்பு மாணவன் சின்னதுரை, அவரது சகோதரி மீது, சக மாணவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். பள்ளி மாணவர்களிடையே சாதிய சிந்தனையை தூண்டி அவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி பிரச்சனைக்காக நடக்கும் கொடூர தாக்குதல்களை முற்றிலுமாக தடுக்க தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.